உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மனசாட்சியுடன் புகார் அளிக்க வலியுறுத்தி போலீஸ் ஸ்டேஷனில் திருக்குறள் போர்டு: ஜெயமங்கலம் எஸ்.ஐ.,யின் வித்தியாசமான முயற்சி

மனசாட்சியுடன் புகார் அளிக்க வலியுறுத்தி போலீஸ் ஸ்டேஷனில் திருக்குறள் போர்டு: ஜெயமங்கலம் எஸ்.ஐ.,யின் வித்தியாசமான முயற்சி

தேவதானப்பட்டி:'போலீஸ் ஸ்டேஷனில் மனச்சாட்சியுடன் புகார் அளிக்க வேண்டும்' என்பதை வலியுறுத்தி தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகா, ஜெயமங்கலம் போலீஸ் ஸ்டேஷன் முன் திருக்குறளை பிளக்ஸ் பேனரில் எஸ்.ஐ., முருக பெருமாள் எழுதி வைத்துள்ளார். பெரியகுளம் தாலுகா, ஜெயமங்கலம் போலீஸ் ஸ்டேஷன் முன் 20 அடி உயரம், 10 அடி அகலம் கொண்ட பிளக்ஸ் பேனரில் திருவள்ளுவர் படத்துடன் திருக்குறள் 13 வது அதிகாரம் 'அடக்கம் உடைமை' யில் 123 வது குறள்' செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து ஆற்றின் அடக்கப் பெறின்' என்ற குறளையும், கருத்து 'அறிய வேண்டியவற்றை அறிந்து, நல்வழியில் அடங்கி நடந்தால், அந்த அடக்கம் நல்லோரால் அறியப்பட்டு மேன்மை பயக்கும்.' என பேனர் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து எஸ்.ஐ., முருகப்பெருமாள் கூறுகையில்,' போலீஸ் ஸ்டேஷனுக்கு உண்மையாக புகார் கொடுக்க வருபவர்கள், உண்மைக்கு புறம்பாக புகார் கொடுக்க வருபவர்கள் யார் என்பதை உடனடியாக அடையாளம் காண முடியாது. விசாரணைக்கு பிறகே எது உண்மை, எது பொய் என தெரியும். அதன் பின் வழக்கு பதிந்து விசாரிக்கப்படும். ஸ்டேஷனுக்கு புகார் கொடுக்க வருவோர் உள்ளே நுழையும் போதே இத் திருக்குறளை படித்து விட்டு 'மனசாட்சியோடு' செயல்பட வேண்டும் என்ற எண்ணம் உருவாகும் என கருதி திருக்குறள் வைத்துள்ளதாக தெரிவித்தார். இந்த பேனர் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. --


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

theruvasagan
ஏப் 11, 2025 09:14

அதே மாதிரி கள்ளுண்ணாமை அதிகாரத்தை டாஸ்மாக் கடை முன்பு எழுதி வைத்தால் திராவிட மண்ணு குடிமகன்கள் சரக்கு அடித்துவிட்டு வந்துதான் படிப்பானுக. ஏன் என்றால் குடிக்க போகிற அவசரத்தில் எதையும் கவனிக்க மாட்டானுக. அதையும் தலைகீழாக வைத்தால்தான் படிப்பானுக.


theruvasagan
ஏப் 11, 2025 08:58

பிரமாதம். அதேபோல காவல்துறையும் மனசாட்சிபடி வழக்கை புலன் விசாரணை செய்யவும் நீதித்துறையும் பாரபட்சமில்லாமல் விசாரிதது தீர்ப்பு சொல்லவும் மற்ற அரசாங்க அலுவலகங்களில் லஞ்சம் வாங்காமல் மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவும் போர்டு வைக்கலாம். ஆனால் என்ன உபயோகம். ஏற்கனவே எழுதி வைத்திருக்கும் திருக்குறள் பலகை கீழே உட்கார்ந்துகொண்டுதானே அத்தனை அட்டூழியங்களும் செய்கிறார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை