ஒடிசாவில் இருந்து தேனிக்கு கடத்திய கஞ்சா பறிமுதல் மூன்று பேர் கைது * மூன்று பேர் கைது
தேனி:தேனி மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் பாக்கியம், எஸ்.ஐ., மணிகண்டன் மற்றும் போலீசார் பெரியகுளம்- தேனி பைபாஸ் ரோடு மீனாட்சி விலக்கு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மேலக்கூடலுார் சுப்பையன் சேர்வை தெரு விக்னேஷ்குமார் 20, ஆறு கிலோ 155 கிராம் கஞ்சாவும், அப்பகுதி ஒட்டர் தெருவைச் சேர்ந்த முத்துப்பாண்டி 19, ஆறு கிலோ 135 கிராம் கஞ்சாவும், ஆசாரிமார் தெருவைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஆறு கிலோ 130 கிராம் கஞ்சாவும் வைத்திருந்தனர். ரூ.ஒரு லட்சத்து 85 ஆயிரம் மதிப்புள்ள 18 கிலோ 420 கிராம் கஞ்சா அவர்களிடம் இருந்தது போலீசாரின் சோதனையில் தெரிய வந்தது. மூவரும் ஒடிசா மாநிலத்திற்கு சென்று அங்கிருந்து சென்னை வழியாக அரசு பஸ்களில் பயணம் செய்து தேனிக்கு கஞ்சா கடத்தி வந்ததும் தெரிந்தது. மூவரையும் கைது செய்த போலீசார் தப்பிய கீழக்கூடலுார் முத்துப்பாண்டியை தேடி வருகின்றனர்.