உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மது விற்ற மூவர் கைது

மது விற்ற மூவர் கைது

தேனி; வடபுதுப்பட்டி பட்டாளம்மன் கோயில் தெரு சரவணன் 51, ரூ.5,580 மதிப்புளள 31 மதுபாட்டில்களை விற்பனைக்காக பின்னத்தேவன்பட்டி குடிசை மாற்றுவாரியம் கட்டடம் அருகே காலியிடத்தில் பதுக்கி வைத்திருந்தார். பாட்டில்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். தேனி: உத்தமபாளையம் பொட்டிப்புரம் ராமகிருஷ்ணாபுரம் சுரேஷ் 35 , விற்பனைக்காக ரூ.3750 மதிப்புள்ள 27 மதுபாட்டில்களை பதுக்கி இருந்தார். அனுமந்தன்பட்டி ஆர்.சி., கிழக்கு தெரு சிலம்பரசன் 35. இவர் அனுமந்தன்பட்டி கோம்பை ரோட்டில் வள்ளியம்மன் குளம் அருகில் ரூ.3640 மதிப்புள்ள 26 மதுபாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்தார். போலீசார் மூவரையும் கைது செய்து, 84 மதுபாட்டில்களை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை