வாசகர்கள் கருத்துகள் ( 1 )
உமேஷ்
டிச 01, 2024 09:11
வாடகைக்கு வீடு தேடி வந்திருக்கும். கே.ஒய்.சி எல்லாம் செக் பண்ணுங்க.
மூணாறு : மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்கு சொந்தமான செண்டுவாரை எஸ்டேட், பி. ஆர். டிவிஷனில் குடியிருப்பு பகுதிக்குள் மூன்று குட்டிகளுடன் புலி நடமாடியதால் தொழிலாளர்கள் அச்சம் அடைந்தனர்.அப்பகுதியில் பத்து வரிசை வீடுகளைக் கொண்ட குடியிருப்பில் நேற்று காலை 6:30 மணிக்கு பெண்கள் வீட்டு முற்றத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர். வீட்டு முற்றங்கள் வழியாக சாவகாசமாக குட்டிகளுடன் சென்ற புலி அருகில் உள்ள காட்டிற்குள் சென்று மறைந்தது. குட்டிகளுடன் குடியிருப்பு பகுதியில் புலி நடமாடிய சம்பவம், அப்பகுதியில் தொழிலாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது.
வாடகைக்கு வீடு தேடி வந்திருக்கும். கே.ஒய்.சி எல்லாம் செக் பண்ணுங்க.