உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / இடைத்தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்

இடைத்தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்

மூணாறு : மூணாறு ஊராட்சியில் காலியாக உள்ள இரண்டு வார்டுகளில் இடைத்தேர்தல் பிப்.22ல் நடப்பதால் அதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை (பிப்.5) நிறைவு பெறுகிறது.மூணாறு ஊராட்சியில் 11(மூலக்கடை), 18 (நடையார்) ஆகிய வார்டுகளைச் சேர்ந்த காங்., உறுப்பினர்கள் 2021 டிசம்பரில் கட்சியில் இருந்து விலகி இடது சாரி கூட்டணி கட்சிகளில் இணைந்தனர். அவர்களை கட்சி தாவல் தடுப்பு சட்டத்தின் கீழ் தேர்தல் கமிஷன் கடந்த அக்.12ல் பொறுப்புகளில் இருந்து தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது.அந்த இரண்டு வார்டுகளில் பிப்.22ல் இடைத்தேர்தல் நடப்பதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஜன. 27ல் அமலுக்கு வந்தது. வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை இறுதி நாளாகும். பிப்.6 ல் மனுக்கள் மீதான பரிசோதனை நடக்கிறது. வேட்பு மனுக்களை பிப்.8 வரை வாபஸ் பெறலாம்.அது குறித்து இடுக்கி கலெக்டர் ஷீபா ஜார்ஜ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, மாவட்டத்தில் மூணாறு ஊராட்சியில் இரண்டு வார்டுகளில் பிப்.22ல் இடைத்தேர்தல் நடக்கிறது. அன்று காலை 7:00 முதல் மாலை 6:00 வரை ஓட்டு பதிவு நடக்கும்.பிப்.23ல் காலை 10:00 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை துவங்கும். தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடப்பதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும், என கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ