உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / டிராக்டர் அடமான கடன் தொகைவழங்காமல் ரூ.2.71 லட்சம் மோசடி

டிராக்டர் அடமான கடன் தொகைவழங்காமல் ரூ.2.71 லட்சம் மோசடி

தேனி: தேனியில் அடமான கடன் தொகை ரூ.2.71 லட்சத்தை விண்ணப்பதாரருக்கு வழங்காத நால்வர் மீது நீதிமன்ற உத்தரவில் மோசடி வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.கோட்டூர் விவசாயி ராஜீவ்காந்தி 37. தனியார் வங்கியில் ரூ.5.10 லட்சம் கடன் பெற்று டிராக்டர் வாங்கினார். இதற்கான கடனை செலுத்தி முடித்தார். ராஜீவ்காந்திக்கு பணம் தேவைப்பட்டதால் கம்பம் தனியார் பைனான்ஸ் நிதி நிறுவனத்தில் டிராக்டரின் ஆர்.சி., புத்தகம், ஆவணங்களை அடமானம் வைத்து ரூ.3 லட்சம் கடன் பெற முடிவு செய்தார். பைனான்ஸ் நிறுவன ஏஜன்ட் செல்வம், ராஜீவ்காந்தியிடம் ஆர்.சி., புத்தகதத்தின் ஒரிஜினல், பிற ஆவணங்கள், கையெழுத்து பெற்று, ரூ.2,71,500 கிடைக்கும் என்றார். கடன் தொகை வங்கிக் கணக்கில் பதிவேற்றம் ஆகாததால், ராஜீவ்காந்தி, செல்வத்தை அலைபேசியில் தொடர்பு கொண்டார். அதன்பின் ராஜீவ்காந்திக்கு சேர வேண்டிய கடன் தொகையை டிராக்டர் டீலரின் உரிமையாளர் விமல்குமாரின் வங்கிக் கணக்கில் செலுத்தியது தெரிந்தது. ஏஜன்ட் செல்வம் டிராக்டரின் ஆவணங்களை தர மறுத்தார். பின் வீட்டில் நிறுத்தியிருந்த டிராக்டரை செல்வம், அவரது நண்பர் மூலம் கடத்தி சென்றார்.பாதிக்கப்பட்ட ராஜீவ்காந்தி தேனி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு செய்தார்.விசாரித்த நீதிபதி ஜெயமணி உத்தமபாளையம் பைனான்ஸ் கிளை மேலாளர் பாலமுருகன், ஏஜன்ட்டுகள் செல்வம், ஷாகுல்ஹமீது, உரிமையாளர் விமல்குமார் ஆகிய நால்வர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்க உத்தரவிட்டார்.அதன்படி நால்வர் மீதும் வீரபாண்டி எஸ்.ஐ., ராஜசேகர் மீதும் மோசடி வழக்குப் பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ