மேலும் செய்திகள்
போலீஸ் செய்திகள்...
22-Oct-2025
தேனி: பழனிசெட்டிபட்டி சஞ்சய்காந்தி தெரு ரூபன்குமார் 30. இவர் தேனி மேற்குச் சந்தையில் மரக்கடை நடத்தினார். இவர் பழனிசெட்டிபட்டியில் இருந்து தேனி நோக்கி டூவீலரில் வந்து கொண்டிருந்தார். பழனிசெட்டிபட்டிகாமாட்சியம்மன் கோயில் தெரு ராமசாமி 40, ஓட்டிவந்த டூவீலர், ரூபன்குமார் ஓட்டிச்சென்ற டூவீலர் மீது மோதி விபத்து நடந்தது. இதில் நிலைதடுமாறி கீழே விழுத்த ரூபன்குமார் தலையில் பலத்த காயம் ஏற்பட்டன. 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவகல்லுாரிக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியில் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மனைவி அங்காளஈஸ்வரி புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் ராமசாமி மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றார்.
22-Oct-2025