உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பாலத்தில் போக்குவரத்திற்கு தடை

பாலத்தில் போக்குவரத்திற்கு தடை

மூணாறு: சேதமடைந்த பாலத்தை சீரமைக்காததால் பாதுகாப்பு கருதி போலீசாரின் பரிந்துரைபடி பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. மூணாறு நகரில் தபால் அலுவலகம் அருகில் ஆங்கிலேயர் காலத்தில் ராணுவத்தினர் அமைக்கும் 'பெய்லி' மாதிரியில் இரும்பு பாலம் அமைக்கப்பட்டது. பழமை வாய்ந்த பாலத்தின் இரும்புகள் துருப் பிடித்து பலம் இழக்கும் நிலை ஏற்பட்டதால், அதன் அருகில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு கான்கிரீட் பாலம் கட்டப்பட்டது. அதன் பிறகு இரும்பு பாலம் ஒரு வழி பாதையாக பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் பாலத்தின் நடுவில் ரோடு சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியது. அதனை சீரமைக்க தேசிய நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் முன்வரவில்லை. அதனால் ஆபத்தான நிலை ஏற்பட்டதால் பாதுகாப்பு கருதி பாலத்தில் போக்குவரத்தை தடை செய்யுமாறு மூணாறு போலீசார், தேசிய நெடுஞ்சாலைதுறை அதிகாரிகளிடம் பரிந்துரைத்தார். அதன்படி அதிகாரிகள் நேற்று போக்குவரத்தை தடை செய்தனர். இந்நிலையில் பாலத்தை சீரமைக்காததை கண்டித்து இந்திய இளைஞர் பெருமன்றத்தினர் பாலத்தில் கொடிகளை நட்டி எதிர்ப்பை வெளிபடுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை