பேராசிரியர்களுக்கு பயிற்சி
தேனி: நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரியில் பேராசிரியர்களுக்கான மேம்பாட்டு பயிற்சி வகுப்பு நடந்தது. தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறைத்தலைவர் தர்மராஜன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ஜீவகன், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் ராமச்சந்திரன், கல்லுாரி செயலாளர் சோமசுந்தரம், இணைச்செயலாளர் சுப்பிரமணி முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் மதளைசுந்தரம் பயிற்சி வகுப்பின் நோக்கம் பற்றி பேசினார். பெங்களூரு இன்கூயிப் ஆராய்ச்சி மைய இயக்குநர் மதுமோகன் பேசுகையில், 'மாணவர்களின் திறமையை வளர்க்க புதிய யோசனைகள், தொழில்நுட்ப தீர்வுகளை தரும் செயலலிகள் உருவாக்குதல், சாப்ட்வேர் டினைசில் பயன்படும் கிரியேஷனல் பேட்டர்ன், குழு செயல்பாடுகள்,' பற்றி பேசினார்.