உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மேம்பாலத்தில் வளரும் மரங்கள்

மேம்பாலத்தில் வளரும் மரங்கள்

தேனி : சில ஆண்டுகளுக்கு முன் திண்டுக்கல் -குமுளி பைபாஸ் ரோடு பயன்பாட்டிற்கு வந்தது. இந்த ரோடு தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ரோட்டில் பூதிப்புரம் அருகே ஆதிபட்டியில் ரயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தின் பக்கவாட்டு சுவர் பகுதிகளில் உள்ள 'சிலாப்' அமைப்பை சேதப்படுத்தி மரங்கள், செடிகள், கொடிகள் வளர்ந்துள்ளன. இவற்றினால் பாலத்தின் உறுதி தன்மை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறை ஆணையம் பாலத்தில் வளர்ந்துள்ள மரங்களை அகற்றி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை