உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / விமான விபத்தில் இறந்தோருக்கு அஞ்சலி

விமான விபத்தில் இறந்தோருக்கு அஞ்சலி

தேனி: குஜராத், ஆமதாபாதில் நடந்த விமான விபத்தில் அம்மாநில முன்னாள் முதல்வர் விஜய்ரூபானி உட்பட 241 உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கு தேனி நகராட்சி அருகே ஹிந்து எழுச்சி முன்னணியின் சார்பில் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. மாவட்டத் தலைவர் ராமராஜ் தலைமை வகித்தார். மாவட்ட இணை அமைப்பாளர் செல்வபாண்டி, மாவட்டப் பொருளாளர் செந்தில்குமார், மாவட்டச் செயலாளர் ராஜேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரத் தலைவர் சிவராமன், நகரச் செயலாளர்கள் சுரேஷ், அய்யப்பன் அழகுபாண்டி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். அனைவரும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !