இருவர் கைது
தேனி: தேனி எஸ்.ஐ., முருகேசன் தலைமையிலான போலீசார் பழைய, புது பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அனுமதி இன்றி மதுபாட்டில்கள் விற்பனைக்கு வைத்திருந்த வருஷநாடு மேற்குத்தெருவை சேர்ந்த பாண்டீஸ்வரன், தேனி பாண்டியன் ஆயில் மில் தெருவை சேர்ந்த ராஜா ஆகியோரை கைது செய்தனர். 52 மதுபாட்டில்கள் கைப்பற்றபட்டன.