உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வியாபாரியை தாக்கிய இருவர் கைது

வியாபாரியை தாக்கிய இருவர் கைது

ஆண்டிபட்டி : சக்கம்பட்டி காளியம்மன் கோயில் தெற்கு தெருவை சேர்ந்தவர் காமாட்சி 30, இவரும் இவரது உறவினர் அசோக்குமாரும் தேனி மெயின் ரோட்டில் தனியார் மருத்துவமனை அருகே தக்காளி வியாபாரம் செய்து வந்தனர். அப்போது மறவபட்டியைச் சேர்ந்த ரமேஷ், பிரபு இருவரும் தக்காளி வாங்க வந்துள்ளனர்.தக்காளியை வாங்கும் போது கெட்டுப்போன தக்காளிகளை விற்று ஊரை ஏமாற்றுகிறாயா என்று காமாட்சியிடம் தகராறு செய்து தாக்கி உள்ளனர். காமாட்சி புகாரில் ஆண்டிபட்டி போலீசார் தகராறு செய்த ரமேஷ், பிரபு இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !