உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அனுமதி இன்றி டாஸ்மாக் பாரில் மதுபாட்டில்கள் விற்ற இருவர் கைது

அனுமதி இன்றி டாஸ்மாக் பாரில் மதுபாட்டில்கள் விற்ற இருவர் கைது

தேனி : தேனி பூதிப்புரம் டாஸ்மாக் பாரில் காலையில் அரசு அனுமதி இன்றி விற்பனைக்கு வைத்திருந்த 665 மதுபாட்டில்களை பழனிசெட்டிபட்டி போலீசார் பறிமுதல் செய்தனர். பார் உரிமையாளர் உட்பட மூவர் மீது வழக்குப் பதிந்து, இருவரை கைது செய்தனர்.தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மதியம் 12:00 மணிக்கு திறக்கப்படுகின்றன. ஆனால் அதற்கு முன்னதாகவே சட்ட விரோதமாக டாஸ்மாக் பார்கள், சில இடங்களில் மது விற்பனை களை கட்டுவதாக புகார் எழுந்தது. இந்நிலையில் பழனிசெட்டிபட்டி எஸ்.ஐ., மலரம்மாள் தலைமையில் போலீசார் பூதிப்புரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்பகுதி டாஸ்மாக் பார் அருகே காலை 7:30 மணிக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்வது தெரிந்தது. அங்கு அனுமதியின்றி விற்பனைக்கு வைத்திருந்த 665 மதுபாட்டில்கள், மது விற்ற பணம் 3320 ரூபாயை கைப்பற்றினர். விற்பனையில் ஈடுபட்டிருந்த பூதிப்புரம் ஜெயம் நகர் அறிவழகன் 64, வாழையாத்துப்பட்டி காசிமாயன் 42, அதேப்பகுதியை சேர்ந்த பார் உரிமையாளர் மொக்கைசாமி ஆகிய மூவர் மீது வழக்கு பதிந்து, மது விற்ற இருவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ