டூவீலர் திருடிய இருவர் கைது
மூணாறு: கேரளா, கொடுங்கலூரைச் சேர்ந்த தன்ஷீர் 28, சாலக்குடியைச் சேர்ந்த ரியாஸ் 23, ஆகியோர் இரு தினங்களுக்கு முன்பு கோலஞ்சேரி, புத்தன்குருசு பகுதியில் வீட்டின் முன் நிறுத்தி இருந்த டூவீலரை திருடினர். அந்த டூவீலரில் மூணாறுக்கு வந்த இருவரும் வட்டவடையில் தனியார் தங்கும் விடுதியில் தங்கினர். இருவரையும், தேவிகுளம் போலீசாரின் உதவியுடன் கைது செய்து டூவீலரையும் பறிமுதல் செய்தனர்.