மேலும் செய்திகள்
கார் கண்ணாடியை உடைத்து பெண் மீது தாக்குதல்
30-Sep-2025
கம்பம்: கம்பத்தில் இருந்து காமயகவுண்டன்பட்டி செல்லும் - ரோட்டில் கம்பம் வடக்கு எஸ். ஐ. நாகராஜன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். ஏழரசு கோயில் அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து சென்ற இருவரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர். அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்த போது அதில் 22 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 2.20 லட்சம் விசாரணையில் ராயப்பன்பட்டியை சேர்த்தவரும் தற்போது திருப்பூரில் வசிக்கும் சுந்தர் 36, செல்வராஜ் 29, என தெரிந்தது. இருவரையும் கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.
30-Sep-2025