உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / நின்ற பஸ்சில் டூவீலர் மோதி இருவர் காயம்

நின்ற பஸ்சில் டூவீலர் மோதி இருவர் காயம்

கடமலைக்குண்டு: தங்கம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் ராஜா 43, அரசு போக்குவரத்து கழகம் தேனி கிளையில் டிரைவராக உள்ளார். நேற்று முன்தினம் தேனியில் இருந்து பயணிகளை ஏற்றுக் கொண்டு வாலிப்பாறை நோக்கி பஸ்சை ஓட்டிச் சென்றார். தென்பழனி பஸ் ஸ்டாப்பில் பயணிகளை இறக்கி விடுவதற்காக பஸ் நின்றது. அப்போது மயிலாடும்பாறையைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் டூவீலரில் சக்கரை என்பவரை பின்னால் உட்கார வைத்து ஓட்டி வந்து அரசு பஸ்சின் பின்னால் மோதினார். இதில் காயமடைந்த ஜெயச்சந்திரன், சக்கரை இருவரையும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை