இரு தரப்பு தகராறு; 10 பேர் மீது வழக்கு
தேவதானப்பட்டி; எருமலைநாயக்கன்பட்டி இந்திரா காலனியைச் சேர்ந்த டிராக்டர் டிரைவர் தங்கப்பாண்டி 30. வேட்டுவன்குளம் அருகே இவரது மைத்துனர் ராஜபாண்டியிடம் பேசிக்கொண்டிருந்தார். இதே ஊரைச் சேர்ந்த கார்த்திக் ராஜா 31. இவரது தந்தை கருப்பசாமி 50. உறவினர்கள் பிரசாத்,கவியரசன் ஆகியோர் தங்கப்பாண்டியிடம், 'மின் திருட்டு செய்து தண்ணீர் எடுக்கும் விபரத்தை மின்வாரிய அலுவலகத்தில் ஏன் புகார் செய்தாய். இதனால் எங்களுக்கு மின்வாரியம் அபராதம் விதித்துள்ளது என்றனர். இந்த தகராறில் தங்கப்பாண்டியை, பிரசாத், கருப்பசாமி, கவியரசன் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். புகாரில் ஜெயமங்கலம் போலீசார் கார்த்திக் ராஜா, கருப்பசாமி உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். கார்த்திக்ராஜா புகாரில்: எனது தந்தை கருப்பசாமிக்கும், தங்கப்பாண்டிக்கும் டிராக்டர் ஓட்டுவதில் முன் விரோதம் இருந்தது. தங்கப்பாண்டி, இவரது அண்ணன் நவீன்குமார், மைத்துனர் ராஜபாண்டி, உறவினர்கள் விக்கி, வல்லரசு ஆகியோர் என்னை கம்பால் அடித்து காயப்படுத்தினர் என்ற புகாரில் ஜெயமங்கலம் போலீசார் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.--