மேலும் செய்திகள்
ஆயுதப்படை போலீஸ் வாகனம் மோதி விவசாயி பலி
18-Sep-2024
தேவதானப்பட்டி: தேனி அருகே வயல்பட்டி வடக்கு தெரு இந்திராநகரைச் சேர்ந்தவர் சக்கமநாயக்கார் 45. இவர் தனது மகள்கள் நாகஜோதி 16. நாகேஸ்வரி 13. யுடன் டூவீலரில் ஒட்டன்சத்திரத்தில் உள்ள கோயிலுக்கு சென்று கொண்டிருந்தார். டூவீலரை சக்கமநாயக்கர் ஓட்டினார். தேவதானப்பட்டி பைபாஸ் ரோட்டில் செல்லும் போது, பின்னால் சென்ற டூவீலர் மோதியது. இதில் சக்கமநாயக்கர் மற்றும் இரு மகள்களுக்கு காயம் ஏற்பட்டது.பலத்த காயமடைந்த மூவரும் தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பரிசோதனை செய்த டாக்டர் சக்கமநாயக்கர் இறந்துவிட்டதாக தெரிவித்தார். விபத்தை ஏற்படுத்திய (டி.எண் 07.ஜிபி. 7063 )பதிவு எண் கொண்ட டூவீலர் ஓட்டுநரை தேவதானப்பட்டி போலீசார் தேடி வருகின்றனர்.--
18-Sep-2024