மேலும் செய்திகள்
விபத்தில் லோடுமேன் பலி
07-Jun-2025
தேவதானப்பட்டி: டூவீலர் 'பார்க்கிங்' தகராறில் மின்துறை பணியாளர் மணிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.தேவதானப்பட்டி தெற்கு தெரு மணி 48. தேனி அருகே க.விலக்கில் மின்துறை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் வீட்டிற்கு முன் டூவீலரை நிறுத்தியுள்ளார். வீட்டருகே குடியிருக்கும் சக்திராஜா, ஏன், என் வீட்டருகே டூவீலரை நிறுத்துகிறாய் என மணியுடன் தகராறு செய்தார். சக்திராஜா நண்பர் செல்வராஜ், மணியை பிடித்துக் கொண்டார். சக்திராஜா அரிவாளால் மணியை வெட்டினார். மேலும் சக்திராஜா மனைவி தேவி, அக்கா தனம் ஆகியோர் மணியை தாக்கினர். மணியின் மனைவி முத்தாயி, மருமகள் அழகுபாண்டியம்மாள் ஆகியோரையும் தாக்கினர். மணி உட்பட மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். போலீசார் சக்திராஜா, தேவி, தனம், செல்வராஜ் உட்பட நால்வர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.-
07-Jun-2025