உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / போலீஸ் ஸ்டேஷன்களில் வீணாகும் வழக்குகளில் தொடர்புடைய டூவீலர்கள்

போலீஸ் ஸ்டேஷன்களில் வீணாகும் வழக்குகளில் தொடர்புடைய டூவீலர்கள்

தேனி: போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்குகளில் தொடர்புடைய டூவீலர்கள் மேற்கூரை வசதியின்றி நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் இவை மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் துருப்பிடித்து காணப்படுகிறது. இதனால் பழைய இரும்பு கடையில் மட்டும் போடும் நிலை ஏற்பட்டுள்ளது.விபத்துக்கள், தடைசெய்யப்பட்ட பொருட்கள் கடத்தல், முறையான ஆவணங்கள் இன்றி இயக்குதல் உள்ளிட்ட புகார்களில் சிக்கும் வாகனங்கள், டூவீலர்களை போலீசார் பறிமுதல் செய்கின்றனர். அதனை போலீஸ் ஸ்டேஷன்களில் வைக்கின்றனர். அதனை ஆண்டிற்கு ஒரு முறை ஆயுத படை மைதானத்தில் ஏலம் விடுகின்றனர். இந்த ஏலத்தினை பயன்படுத்தி பொது மக்கள், வியாபாரிகள் டூவீலர்களை பழுது பார்த்து பயன்படுத்துகின்றனர். ஆனால் மாவட்டத்தில் பெரும்பாலான போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்குகளில் தொடர்புடைய, பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் துருபிடிக்கின்றன. தேனி சப்டிவிஷனுக்கு உட்பட்ட அல்லிநகரம் போலீஸ் ஸ்டேஷனில் பறிமுதல் செய்யப்பட்ட டூவீலர்கள் துருப்பிடித்து வீணாகி வருகிறது. மேலும் டூவீலர்கள் நிறுத்தப்பட்டுள்ள பகுதி புதர்மண்டி விஷ பூச்சிகள் அடைக்கலம் ஆகின்றன. இதனால் போலீசாரும் பாதிக்கப்படும் நிலை உள்ளது.வழக்குகளில் தொடர்புடைய டூவீலர்களை குறிப்பிட்ட இடைவெளியில் ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ