உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேனி உழவர் சந்தை சுற்றுச்சுவர் இடிந்து இரு பெண்கள் காயம்

தேனி உழவர் சந்தை சுற்றுச்சுவர் இடிந்து இரு பெண்கள் காயம்

தேனி: தேனி உழவர் சந்தை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் வியாபாரி பொம்மையகவுண்டன்பட்டி மயில்தாய் 65, தற்காலிக பணியாளர் அல்லிநகரம் வெங்கலாநகர் தனலட்சுமி 45 ஆகிய இருவரும் காயமடைந்தனர்.தேனி உழவர் சந்தை தாலுகா அலுவலகம் அருகே செயல்படுகிறது. இங்கு 60க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இவை காலை 6:00 மணி முதல் 11:00 மணி வரை செயல்படுகிறது. நேற்று மதியம் 12:00 மணியளவில் மேற்கு நுழைவாயில் ே சுற்றுசுவர் அருகே தற்காலிக பணியாளர் தனலட்சுமி சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த மூடைகளை மயில்தாய் எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் மயில்தாய், தனலட்சுமி காயமடைந்தனர். இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி மருத்துவக்கல்லுாரியில் சேர்த்தனர்.உழவர் சந்தை அலுவலர்கள் கூறுகையில், 'நான்கு நாட்களுக்கு முன் சுற்றுச்சுவர் சாய்ந்த நிலையில் இருந்தது. துறை உயர் அலுவலர்களுக்கு இதுபற்றி தகவல் தெரிவித்திருந்தோம். பொதுமக்கள் ,வியாபாரிகள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி வந்தோம்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை