உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேனியில் இன்று உதயநிதி ஆய்வு

தேனியில் இன்று உதயநிதி ஆய்வு

தேனி: தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகாம் பெருந்திட்ட வளாகத்தில் துணை முதல்வர் உதயநிதி இன்று (ஜூன் 16) பல்வேறு அரசு துறைகள் சார்பில் நடக்கும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்வதுடன் கட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார். ஆய்வு கூட்டத்திற்கு பிறகு துணை முதல்வர் உதயநிதி புதிய வழித் தடங்களில் மினி பஸ் சேவைகள் துவங்கி வைக்கிறார். வீரபாண்டி அங்கன்வாடி மையங்களை அவர் கள ஆய்வு செய்கிறார். பின் மதுராபுரியில் உள்ள தனியார் மஹாலில் நடக்கும் தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார். மதியம் 3:00 மணியளவில் பழனிசெட்டிபட்டியில் தி.மு.க., ஐ.டி., பிரிவு நிர்வாகிகளை அவர் நேர்காணல் செய்கிறார். பிறகு மாலை 4:30 மணிக்கு அவர் மதுரை செல்கிறார்.துணை முதல்வரை வரவேற்க தி.மு.க., நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ