பராமரிக்காத சாய்வு தளம்
தேனி: தேனி மாவட்ட நீதிமன்றம் எதிரே உள்ள பஸ் ஸ்டாப்பை தினமும் ஏராளமான வழக்கறிஞர்கள், விசாரணை தொடர்பாக வருபவர்கள் பயன்படுத்துகின்றனர். பஸ் ஸ்டாண்டில் மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் வசதிக்காக சாய்வுதளம் அமைக்கப்பட்டு இருந்தது. தற்போது அத்தளம் சேதமடைந்துள்ளது. படிக்கட்டுகளும் சேதமடைந்துள்ளன. இதனால் மாற்றுத்தினறாளிகள், வயதானவர்கள் தளத்தை பயன்படுத்த முடியவில்லை. பகலில் வெயிலில் இருந்து தப்பிக்க அருகில் உள்ள மரத்தடியில் பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். மேலும் பஸ் ஸ்டாப் சுவர்களில் விளம்பரங்கள், போஸ்டர்கள் ஒட்டியதால் அசுத்தமாக உள்ளது.