உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பயன்படுத்த முடியாத பயணிகள் நிழற்குடை

பயன்படுத்த முடியாத பயணிகள் நிழற்குடை

கூடலுார், : குள்ளப்பகவுண்டன்பட்டி பஸ் ஸ்டாப் பழைய பொருட்கள் வைக்கும் கோடவுனாக மாறியதால் பயணிகள் நிழற்குடை ரூ.4 லட்சம் அரசு நிதி வீணாகியுள்ளது.குள்ளப்பகவுண்டன்பட்டி பிள்ளையார் கோயில் முன் பஸ் நிறுத்தம் உள்ளது. இப்பகுதியில் பயணிகள் நிற்பதற்கு இடமின்றி ஆங்காங்கே கடைகளின் ஓரங்களில் நின்று சிரமப்பட்டனர். இந்நிலையில் 2017ல் ரூ.4 லட்சம் மதிப்பில் எம்.எல்.ஏ., நிதியிலிருந்து பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டது. ஒரு சில மாதங்கள் மட்டுமே பயன்பாட்டில் இருந்தது. அதன்பின் தேவையற்ற பழைய பொருட்கள் வைக்கும் இடமாகவும், தனியார் ஓட்டல்களில் உள்ள தேங்காய் மட்டைகளை குவிக்கும் இடமாகவும் மாறியது. இதனால் பயணிகள் மழை, வெயில் காலங்களில் சிரமப்படுவது தொடர்கிறது. பயணிகள் அமரும் வகையில் அப்பகுதியை சுத்தம் செய்து பராமரிக்க ஊராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி