உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தலைகீழாக நின்று பஸ் டிரைவர் போராட்டம்

தலைகீழாக நின்று பஸ் டிரைவர் போராட்டம்

மூணாறு : மூணாறில் கேரள அரசு பஸ் டிப்போவில் ஊதியம் வழங்காததை கண்டித்து டிரைவர் தலைகீழாக நின்று நூதன போராட்டம் நடத்தினார்.சில செயல்பாடுகள் 'தலை கீழாக நின்றாலும் நடக்காது' என சொல்வதுண்டு. அது போன்று கேரள அரசு தலை கீழாக நின்றாலும் ஊதியம் வழங்காது என்பதை சுட்டிகாட்டும் வகையில் மூணாறில் கேரள அரசு பஸ் டிரைவர் தலைகீழாக நின்று நூதன போராட்டம் நடத்தினார். மூணாறு அருகே அடிமாலியைச் சேர்ந்தவர் ஜெயகுமார். இவர் மூணாறில் கேரள அரசு பஸ் டிப்போவில் டிரைவராக பணியாற்றுகிறார்.இம்மாதம் இதுவரையிலும் அரசு பஸ் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கபடவில்லை. அதனை கண்டித்து பி.எம்.எஸ். தொழிற்சங்கம் சார்பில் ஜெயகுமார் தலைகீழாக நின்றும் அவர் அருகே வேறு இரண்டு ஊழியர்கள் நின்றும் டிப்போவில் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் அரை மணி நேரம் நீடித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை