உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மேகமலையில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வலியுறுத்தல்

மேகமலையில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வலியுறுத்தல்

சின்னமனூர்: மேகமலை பகுதியில் 24 மணி நேரம் செயல்படும் வகையில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க சுகாதாரத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தோட்ட தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.தேனி மாவட்டத்தில் அதிக சுற்றுலா பயணிகள் வரும் இடமாக மேகமலை திகழ்கிறது. இங்குள்ள மேகமலை, ஹைவேவிஸ், மணலாறு, வெண்ணியாறு, மகாராஜா மெட்டு, இரவங்கலாறு உள்ளிட்ட பகுதிகளில் தரையை தொட்டு செல்லும் மேக கூட்டங்களும், குளிர்ச்சியான சீதோஷ்ண நிலையும், சிறிய நீர்த்தேக்கங்களும், யானைகள் நடமாட்டமும் ரம்மியமாக இருக்கும். தேயிலை தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் இங்குள்ள எஸ்டேட் குடியிருப்புகளில் தங்கி உள்ளனர். இவர்களுக்கு அத்தியாவசிய மருத்துவ வசதி மறுக்கப்பட்டுள்ளது.மணலாறு பகுதியில் துணை சுகாதார நிலையத்தில் செவிலியர் மட்டுமே உள்ளார். அவசர மருத்துவ சிகிச்சைகள், பிரசவங்கள் என்றால் குறைந்தது 2 மணிநேரம் பயணம் செய்து சின்னமனூருக்கு வர வேண்டும். இரவில் வாகன வசதி இல்லை. வனத்துறையும் அனுமதிக்காது.எனவே இங்குள்ள தோட்ட தொழிலாளர்களின் மருத்துவ தேவையை பூர்த்தி செய்ய 24 மணி நேரம் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையம் ஹைவேவிஸ் பேரூராட்சி அலுவலகம் அருகில் அமைக்க வேண்டும். சுழற்சி முறையில் டாக்டர், செவிலியர் பணியிடங்கள் ஏற்படுத்த வேண்டும். அவசர தேவை மற்றும் மலைப்பகுதி என்பதால் இந்த சுகாதார நிலையத்திற்கென தனி ஆம்புலன்ஸ்,டாக்டர்கள் பயன்படுத்த வாகன வசதி செய்ய வேண்டும் என்று தோட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை