பசுந்தாள் உரம் பயன்படுத்துங்கள்
கம்பம்: வேளாண், தோட்டக் கலை பயிர் உற்பத்தியை பெருக்கவும், நோய்த் தாக்குதலில் இருந்து பயிர்களை காக்கவும், ரசாயன உரங்கள், பூச்சி கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்படுகிறது. இதனால் மண் வளம் பாதிக்கப்படுகிறது. உரங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதால், அந்நிய செலவாணி ,விவசாயிகளுக்கு மானியம் வழங்குவதால் அரசிற்கு கோடிக் கணக்கில் செலவாகிறது. எனவே,விவசாயிகள் தக்கைப் பூண்டு, சணப்பு மற்றும் பயறு வகைகளை விதைப்பு செய்து, பூ பூக்கும் தருணத்தில் மடக்கி உழுதால், யூரியா போடுவதை குறைத்து கொள்ளலாம். குறிப்பாக பாசிப்பயறு, உளுந்து போன்றவற்றை விதைப்பு செய்து மடக்கி உழுதால், யூரியா போடுவதை குறைக்கலாம் என்கின்றனர். எனவே விவசாயிகள் பசுந்தாள் உர மேலாண்மையை பின்பற்ற வேளாண் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.