உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வேன் மரத்தில் மோதி ஒருவர் பலி

வேன் மரத்தில் மோதி ஒருவர் பலி

சின்னமனுார், :சின்னமனுார் அருகே சீலையம்பட்டியில் ரோட்டின் ஓரத்தில் உள்ள மரத்தில் ஆம்னி வேன் மோதியதில் ஒருவர் பலியானார். 4 பேர் காயமடைந்தனர்.சின்னமனூர் அருகே உள்ள எரசக்கநாயக்கனுாரை சேர்ந்தவர் செல்வக்குமார் 48,இவரது சகோதரர் நாகராஜ் 46, இருவரும் தங்கள் குடும்பத்தினருடன் ஆம்னி வேனில் சேடபட்டியில் உள்ள தங்களின் குலதெய்வம் கோயிலிற்கு சென்றுள்ளனர். சாமி கும்பிட்டு விட்டு நேற்று திரும்பி வந்துள்ளார். வரும் போது சீலையம்பட்டி அருகே ரோட்டின் ஓரத்தில் இருந்த புளிய மரத்தில் வேன் மோதியது.இதில் முன்புறம் அமர்ந்திருந்த நாகராஜ் அதே இடத்தில் பலியானார். அவரது மனைவி சுதா, மகள் கோகிலா, நாகஜோதி, செல்வக்குமார் ஆகியோர் காயமடைந்தனர்.காயமடைந்தவர்கள் சின்னமனூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். எஸ்.ஐ - சுல்தான் பாட்சா விசாரிக்கிறார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ