உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஓய்வுபெற்ற 20 நாளில் வி.ஏ.ஒ., பலி

ஓய்வுபெற்ற 20 நாளில் வி.ஏ.ஒ., பலி

உத்தமபாளையம்: பணியில் இருந்து ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ., 20 நாளில் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.உத்தமபாளையம் பகவதியம்மன் கோயில் தெரு ஜெயக்குமார் 60, இவர் உத்தமபாளையம் தாலுகாவில் வி. ஏ. ஓ.. வாக பணியாற்றி கடந்த மே 31ல் ஓய்வு பெற்றார். தினமும் உத்தமபாளையம் புது பைபாஸ் ரோட்டில் நடைப்பயிற்சிக்கு செல்வது வழக்கம். நேற்று முன்தினம் அதிகாலை 5:30க்கு உத்தமபாளையம் புது பைபாஸ் ரோட்டில் நடைப்பயிற்சி சென்றார். அப்போது அந்த வழியாக வந்த டூவீலர் ஜெயக்குமார் மீது மோதி தூக்கி வீசப்பட்டார். பலத்த காயங்களுடன் அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்சில் உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின் தீவிர சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு இறந்தார். உத்தமபாளையம் போலீசார் நடத்திய விசாரணையில் டூவிலரில் மோதி விபத்தை ஏற்படுத்தியவர் புதுக்கோட்டை மாவட்டம் ரெங்கநாதபுரத்தை சேர்ந்த ஸ்டீபன் மகன் சந்தோஷ் என தெரிய வந்துள்ளது. இறந்த ஜெயக்குமார் மகள் நிவேதிதா புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை