உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வி.ஏ.ஓ., மாறுதல் கலந்தாய்வு ஜூலையில் நடத்த உத்தரவு

வி.ஏ.ஓ., மாறுதல் கலந்தாய்வு ஜூலையில் நடத்த உத்தரவு

கம்பம்,:ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் வி.ஏ.ஓ., க்களுக்கு நடைபெறும் பொது மாறுதல் கலந்தாய்வை இனி ஜூலையில் நடத்த வருவாய் நிர்வாக ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது.வி.ஏ.ஓ., க்கள் பொது மாறுதல் கலந்தாய்விற்கு ஒவ்வொரு முறையும், மாநில வருவாய் நிர்வாக ஆணையரிடம் முன் அனுமதி பெற வேண்டும். வி.ஏ.ஓ., க்களின் பொது மாறுதல் கலந்தாய்வு ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் நடத்தப்பட்டது. இனி பொது மாறுதல் தகுதி நிர்ணயம் செய்யும் நாளாக ஜுலை முதல் தேதியை கணக்கில் எடுத்துக் கொள்ள வருவாய் நிர்வாக கூடுதல் ஆணையர் எஸ். நடராஜன் உத்தரவிட்டுள்ளார்.அதன்படி தமிழகம் முழுவதும் வி.ஏ.ஓ.க்களின் பொது மாறுதல் கலந்தாய்வு ஜூலையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ