தூய்மை பணியாளரை தாக்கிய விஜய் ரசிகர்கள் கைது
தேவதானப்பட்டி: பெரியகுளம் அருகே குள்ளப்புரம் கிழக்கு தெரு ராஜேந்திரன் 58. தூய்மை பணியாளர். அதே பகுதியைச் சேர்ந்த விஜய் 28. இவரது நண்பர் பாண்டி 36. இருவரும் த.வெ.க., தலைவர் விஜய் ரசிகர்கள். விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அப்பகுதியில் ஒலிபெருக்கி வைத்து பாடல்களை அதிக சத்தத்துடன் ஒளிபரப்பினர். ராஜேந்திரன் இது குறித்து கேட்டுள்ளார். இதற்கு விஜய், பாண்டி ஆகியோர் ராஜேந்திரனை அடித்துள்ளனர். புகாரில் ஜெயமங்கலம் போலீசார் இருவரையும் கைது செய்தனர்.பாண்டிபுகாரில், 'ஒலிபெருக்கி வைத்ததிற்கு ராஜேந்திரன் எதிர்ப்பு தெரிவித்து கழட்ட சொன்னார். நாங்கள் மறுத்தோம். இதனால் எங்களை ஆபாசமாக பேசி, கையால் அடித்தார். இவரது புகாரில் ராஜேந்திரன் கைது செய்யப்பட்டார்.