உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கழிவு நீர் கலந்த குடிநீர் சப்ளை கலெக்டரிடம் கிராம மக்கள் புகார் -கருநாக்கமுத்தன்பட்டி கிராம சபையில் விவாதம்

கழிவு நீர் கலந்த குடிநீர் சப்ளை கலெக்டரிடம் கிராம மக்கள் புகார் -கருநாக்கமுத்தன்பட்டி கிராம சபையில் விவாதம்

கூடலுார்: கருநாக்கமுத்தன்பட்டியில் கழிவு நீர் கலந்த குடிநீர் சப்ளை ஆவதாக கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட கலெக்டரிடம் பாட்டிலில் குடிநீரை பிடித்து காட்டி கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்.மே தினத்தை முன்னிட்டு கம்பம் ஒன்றியம் கருநாக்கமுத்தன்பட்டியில் கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் பார்வையாளராக கலெக்டர் ரஞ்சீத் சிங் கலந்து கொண்டு பேசும்போது:பெற்றோர்கள் குழந்தைகளை அங்கன்வாடி மையங்களுக்கு தொடர்ச்சியாக அனுப்ப வேண்டும். ஆரம்பக் கல்வி கற்பிக்கப்படுவதுடன் ஊட்டச்சத்து குறைபாடு எடை குறைவை சரி செய்ய வேண்டும். குழந்தை திருமணத்தை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். இளம் வயது திருமணம் குறித்து தகவல் தெரிந்தால் மாவட்ட நிர்வாகத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும், என்றார்.கழிவு நீர் கலந்த குடிநீர்:கழிவு நீர் கலந்த குடிநீரை பாட்டிலில் பிடித்து வந்த பொதுமக்கள் கலெக்டரிடம் வழங்கி புகார் கூறினர். அதில் 'கூடலுாரிலிருந்து வெளியேறும் கழிவு நீர் முழுவதும் முல்லைப் பெரியாற்றில் கலப்பதால் அதை பம்பிங் செய்து குடிநீராக பயன்படுத்தும் கிராம மக்களுக்கு தொற்று நோய் பரவுகிறது. பல ஆண்டுகளாக இருந்து வரும் இப் பிரச்னைக்கு இதுவரை தீர்வு கிடைக்கவில்லை,' என்றனர்.'சுத்தமான குடிநீர் வழங்குவது முக்கியமான நிலையில் கழிவு நீர் கலப்பதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்படும்,' என கலெக்டர் உறுதி அளித்தார். ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் அபிதா ஹனீப், வேளாண் இணை இயக்குனர் சாந்தாமணி, சுகாதார இணை இயக்குனர் கலைச்செல்வி, ஆர்.டி.ஓ., சையது முகமது உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை