உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அரசு வழங்கிய பட்டா இடத்தை பத்திர பதிவு செய்வதில் சிக்கல் மதுபார் அமைக்க கிராமத்தினர் எதிர்ப்பு

அரசு வழங்கிய பட்டா இடத்தை பத்திர பதிவு செய்வதில் சிக்கல் மதுபார் அமைக்க கிராமத்தினர் எதிர்ப்பு

தேனி: தேனி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மனு அளித்தனர். கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. டி.ஆர்.ஓ., ராஜகுமார் முன்னிலை வகித்தார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலர் காமாட்சி, ஆதிதிராவிடர் நல அலுவலர் சம்பூர்ணம் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர். இலவச வீட்டு மனைபட்டா, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, உதவித்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மனு அளித்தனர். பெரியகுளம் தாலுகா ஜி.கல்லுப்பட்டி ஜெ.கே., காலனி தெற்கு தெரு உமாமகேஸ்வரி பொதுமக்கள் வழங்கிய மனுவில், குறிப்பிட்ட முகவரியில் 25 ஆண்டுகளாக வசிக் கிறோம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார். அங்கு அரசு திட்டங்களிலும், தனியார் மூலம் வீடுகள் கட்டி வசிக்கிறோம். தற்போது அந்த நிலத்தை வாரிசு தாரர்களுக்கு வழங்க வத்தலகுண்டு சார்பதிவாளர் அலுவலகத்தை அணுகினோம். ஆனால், அரசு வழங்கிய பட்டாவில் உள்ள நிலம் அரசு மனையே இல்லை என தகவல் அளித்துள்ளனர். இது தொடர்பாக பல முறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. வாரிசுகள் பெயரில் பட்டா மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றிருந்தது. அய்யம்பட்டி கிராம பொதுமக்கள் சார்பில் அண்ணாதுரை உள்ளிட்டோர் வழங்கிய மனுவில், 'எங்கள் கிராமத்தில் தனியார் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் மதுபார் அமைக்க கூடாது என சில ஆண்டுகளாக மனு அளித்து வருகிறோம். ஆனால், அதனை திறப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது. இதனை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !