உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பருவநிலை மாற்றத்தால் மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல் பரவுகிறது: வழக்கத்தை விட 20 சதவீதம் பேருக்கு கூடுதல் பாதிப்பு

பருவநிலை மாற்றத்தால் மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல் பரவுகிறது: வழக்கத்தை விட 20 சதவீதம் பேருக்கு கூடுதல் பாதிப்பு

தேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களில் பெய்த மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆற்றில் உள்ள குடிநீர் உறை கிணறுகள் பாதிப்படைந்துள்ளது. பல ஊராட்சிகளில் உறை கிணறுகளில் உள்ள நீரை சுத்திகரிப்பு செய்யாமல் நேரடியாக வினியோகம் செய்கின்றனர். பருவநிலை மாற்றத்தால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இந்த பருவநிலை மாற்றம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சளி, இருமல், காய்ச்சல் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. காய்ச்சல் பாதிப்பால் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு செல்வோர் எண்ணிக்கை வழக்கத்தை விட 20 சதவீத பேர் கூடுதலாக பாதித்துள்ளனர். வைரஸ் காய்ச்சல் பாதிப்பு குறித்து டாக்டர்கள் கூறியதாவது: ஒவ்வொரு மழைக்காலத்திலும் பருவநிலை மாற்றத்தால் ஏதாவது ஒரு வைரஸ் காய்ச்சல் ஏற்படுவது வழக்கம். தற்பொழுது உள்ள காய்ச்சல் என்ன வகை என்று இன்னும் அறியப்படவில்லை. சளி, காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டவர்கள் பொது இடத்தில் இருந்து தங்களை தனிமைப்படுத்திக் கொள்வது அவசியம். இதனால் வீட்டில் மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கலாம். காய்ச்சல் பாதிப்பு இருந்தால் நீர்ச்சத்துள்ள ஜூஸ், சூப் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். மருத்துவரின் ஆலோசனை பெற்று தங்கள் உடல் தன்மைக்கு ஏற்ப மருந்து மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டும். 3 நாளில் காய்ச்சல் படிப்படியாக குறைந்துவிடும். காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் கட்டாயம் ஓய்வு எடுக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் காய்ச்சல் முகாம் நடத்தப்படுகிறது. பள்ளிகளில் முகாம் நடத்தப்பட்டு தொடர்ந்து விழிப்புணர்வு தரப்படுகிறது. ஜனவரி மாதம் வரை ரிஸ்க்கான காலம் என்பதால் வீடு வீடாக கொசுப்புழுக்கள் ஒழிக்கும் பணி முடிக்கி விடப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளிலும் காய்ச்சல் பாதிப்பு குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. அனைவரும் வீட்டை சுற்றி தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். வெறும் காலில் நடப்பதை தவிர்க்க வேண்டும். கொதிக்க வைத்த குடிநீரை பருக வேண்டும். குடிநீரில் குளோரினேசன் கட்டாயம் இருக்க வேண்டும். முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிப்பதால் தொடர்ந்து வரும் பாதிப்பை தவிர்க்கலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !