உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வ.உ.சி. பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

வ.உ.சி. பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

கம்பம்:மாவட்டத்தில் சுதந்திர போராட்ட வீரர் செக்கிழுத்த செம்மல் வ.உ.சி., பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. கம்பம் காந்தி சிலை அருகில் வேலப்பர் வேளாளர் சங்க கட்டடத்தில் உள்ள வ.உ.சி. சிலைக்கு எம்.எல்.ஏ. இராமகிருஷ்ணன் கட்சி நிர்வாகிகளுடன் மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். மத்திய சங்க தலைவர் முருகேசன், வ.உ.சி. வேளாளர் சங்க தலைவர் திருமலை சுதாகர், ஆதி சக்தி வேளாளர் சங்க செயலாளர் ஜனார்த்தனன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், வேலப்பர் சங்க செயலாளர் சந்தனகுமார், பொருளாளர் சோமசுந்தரம், இணை செயலாளர் ரவிராம், யோகா ஆசிரியர் ராஜேந்திரன், கம்பராயர் வேளாளர் சங்க தலைவர் மணிகண்டன், உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். காந்தி சிலை அருகில் வ.உ.சி. இளைஞர் அணி தலைவர் முருகானந்தம் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது. சின்னமனூர்: வ.உ.சி. சிலை மற்றும் வேளாளர் வெற்றிலை கொடிக்கால் சங்க கட்டடத்தில் உள்ள வ.உ.சி. சிலைக்கும் மாலைகள் அணிவிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது. உத்தமபாளையத்தில் சங்க தலைவர் முத்து விநாயகம் தலைமையில் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பெண்கள் பால்குடம் எடுத்து வந்து வ.உ.சி. விலைக்கு அபிஷேகம் செய்தனர். போடி: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வ.உ.சி., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். உடன் அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு மாவட்ட செயலாளர் சையது கான், நகர செயலாளர் பழனிராஜ், நகர அவைத்தலைவர் மணிகண்டன் கலந்து கொண்டனர். அ.தி.மு.க., சார்பில் மாவட்ட துணைச் செயலாளர் சற்குணம் வ.உ.சி., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயச்சந்திரன், நகர செயலாளர்கள் சேதுராம், மாரியப்பன் கலந்து கொண்டனர். தி.மு.க., சார்பில் தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி., வ.உ.சி., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். நகர செயலாளர் புருஷோத்தமன் கலந்து கொண்டனர். காங்., சார்பில் நகர தலைவர் முசாக் மந்திரி தலைமையில் வ.உ.சி., சிலைக்கு மாலை அணிவித்தனர். நாம் தமிழர் கட்சி சார்பில் மாவட்ட பொறுப்பாளர் பிரேம் சந்தர் தலைமையில் வ.உ.சி., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். சிலமலையில் வ.உ. சிதம்பரனார் அரசு அலுவலர் அறக்கட்டளை சார்பில் முன்னாள் ஆசிரியர் வடமலைமுத்து வ.உ.சி., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். தலைவர் சுந்தரம், பொருளாளர் குருநாதன், பேராசிரியர் முத்தையா உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !