உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வாக்காளர் சேர்க்கை: ஆக.12 வரை வாய்ப்பு மாநில தேர்தல் கமிஷன் உத்தரவு

வாக்காளர் சேர்க்கை: ஆக.12 வரை வாய்ப்பு மாநில தேர்தல் கமிஷன் உத்தரவு

மூணாறு: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஆக.12 வரை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில், அப்பணிகள் செய்ய வசதியாக உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்கள் இன்றும், நாளையும் செயல்பட உத்தரவிடப்பட்டது. கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் நெருங்குவதால் வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. அதன்படி வரைவு வாக்காளர் பட்டியல் ஜூலை 23ல் வெளியிடப்பட்டு, அதில் பெயர் சேர்க்கவும், திருத்தங்கள் செய்யவும் ஆக.7 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. அதனை ஆக.12 வரை நீட்டிப்பு செய்து மாநில தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. இடுக்கி மாவட்டத்தில் நேற்று முன்தினம் மதியம் நிலவரப்படி பெயர்கள் சேர்க்கவும், திருத்தம் செய்யவும் ' ஆன் லைன்' வாயிலாக 64,151 பேர் விண்ணப்பித்தனர். வரைவு பட்டியலில் தகவல்களை சரி செய்ய 391, வார்டுகளுக்கு பெயர் மாற்ற 7059, பெயர்களை நீக்கியது தொடர்பாக 8862 பேர் விண்ணப்பித்தனர். பட்டியலில் புதிய வாக்காளர்களை சேர்க்கும் பணியில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கும் பணி நடப்பதால் உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்கள் இன்றும் (ஆக.9), நாளையும் செயல்படும் என தேர்தல் கமிஷன் தெரிவித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ