உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வீணாகும் ஸ்டெச்சர், கட்டில்கள்

வீணாகும் ஸ்டெச்சர், கட்டில்கள்

தேனி: தேனி அரசு மருத்துவக்கல்லுாரி வார்டுகளில் பயன்படுத்தப்பட்டு பழுதடைந்த ஸ்டெச்சர், இரும்பு கட்டில்கள்,பயன் இல்லாத மெத்தைகள், பார்மஸி கழிவுகள் கேட்பாரற்று கிடக்கிறது. இக் கழிவுகள் நர்சிங் கல்லுாரி ஆடிட்டோரியம் அருகே குவிந்து கிடக்கின்றன. இதுதவிர பயன்படுத்தப்பட்ட கட்டில் மெத்தைகள், தலையணைகள் அகற்றப்படாமல் அதிகளவில் குவிந்துள்ளன. இதனால் அருகில் உள்ள நர்சிங் கல்லுாரி ஆடிட்டோரியத்தின் பின்புற கதவுகள் திறக்கப்படாமல் சுகாதாரக்கேட்டுடன் உள்ளது. இதனை முறையாக அகற்றி சுத்தம் செய்திட மருத்துவக் கல்லுாரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க மருத்துவ மாணவர்கள், உதவி பேராசிரியர்கள் கோரியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை