தெருக்களில் கழிவு நீர்
தேனி: தேனியில் நேற்று பகல் முழுவதும் தொடர்ந்து மழை பெய்தவாறு இருந்தது. இதனால் பல இடங்களில் சாக்கடைகளில் கழிவு நீர் செல்ல முடியாத வகையில் குப்பை நிறைந்து காணப்பட்டுது. மழை நீர் செல்ல வழியில்லாததால் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே கடற்கரை நாடார் தெரு, பாரஸ்ட்ரோடு பகுதிகளில் தெருக்களில் தண்ணீர் தேங்கியது. மழை நீருடன் சாக்கடை கழிவு நீரும் தேங்கி நின்றதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.