மேலும் செய்திகள்
சிறுமி பலாத்கார வழக்கு தொழிலாளிக்கு '20 ஆண்டு'
27-Nov-2024
தேனி : தேனி மாவட்டத்தில் மனநலம் பாதித்த சிறுவனிடம் அத்துமீறலில் ஈடுபட்ட வாட்ச்மேன் சுருளிவேல் 54, என்பவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தேனி போக்சோ நீதிமன்ற நீதிபதி கணேசன் தீர்ப்பளித்தார்.கம்பம் பகுதியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவன் கடைக்கு தின்பண்டம் வாங்க சென்றார். அதனை பார்த்த அப்பகுதியில் வாட்ச்மேனாக வேலை பார்த்த சுருளிவேல், தின்பண்டம் வாங்கி தருவதாக கூறினார். இதனை நம்பி சென்ற சிறுவனிடம் சுருளிவேல் அத்து மீறினார். சிறுவன் தனக்கு நடந்ததை வீட்டில் கூறினார். இச்சம்பவம் தொடர்பாக கம்பம் தெற்கு போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து, சுருளிவேலை கைது செய்தனர். வழக்கு விசாரணை தேனி போக்சோ நீதிமன்றத்தில் நடந்தது. நேற்று வழக்கு விசாரணை முடிந்தது.இதில் குற்றவாளி சுருளிவேலிற்கு 25 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி கணேசன் உத்தரவிட்டார். அபராத தொகையை கட்ட தவறினால், மேலும் இரு ஆண்டுகள் தண்டனை அனுபவிக்க உத்தரவிட்டார். இவ் வழக்கில் அரசு வழக்கறிர் அமுதா வாதாடினார்.
27-Nov-2024