உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தீபாவளி நெரிசலை சமாளிக்க கண்காணிப்பு கோபுரங்கள்

தீபாவளி நெரிசலை சமாளிக்க கண்காணிப்பு கோபுரங்கள்

தேனி: தேனியில் தீபாவளி பண்டிகைக்காக பொருட்கள், ஆடைகள் வாங்க வரும் பொது மக்கள் நெரிசல், பாதுகாப்பிற்காக நான்கு இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள், கட்டுப்பாட்டு அறை துவக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை அக்.20ல் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தேனிக்கு மாவட்டத்தில் அனைத்து பகுதியிலும் இருந்து வந்து புத்தாடைகள், இனிப்பு, பட்டாசுகளை பொது மக்கள்வாங்கி செல்ல அதிகளவில் வந்து செல்கின்றனர். இதனால் நகரின் முக்கிய பஜார் பகுதிகளில் மக்கள் நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஷாப்பிங் செய்ய வரும் பொது மக்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும், பாதுகாப்பை உறுதிபடுத்திடவும், பிக்பாக்கெட், திருடர்களை கண்காணிக்கும் வகையில் பகவதியம்மன் கோயில் தெரு முகப்புப்பகுதி, பங்களாமேடு, கம்பம் ரோடு, பழைய பஸ் ஸ்டாண்ட் ஆகிய 4 இடங்களில் உயர் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காலை, மாலை, இரவு வரை போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நேருசிலை அருகே மினி கட்டுப்பாட்டு அறை அமைத்து கண்காணித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி