உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / துாவானம் அணையில் இருந்து சுருளி அருவிக்கு தண்ணீர் திறப்பு

துாவானம் அணையில் இருந்து சுருளி அருவிக்கு தண்ணீர் திறப்பு

கம்பம்: இன்று (சித்திரை 1) தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு, துாவானம் அணையில் இருந்து சுருளி அருவிக்கு தண்ணீர் திறந்து விட வனத்துறை அதிகாரிகள், மின்வாரியத்திற்கு கோரிக்கை விடுத்த நிலையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.சுருளி அருவியில் குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர். சித்திரை முதல் நாளான இன்று (ஏப்.14ல்) தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சுருளி அருவிக்கு ஆயிரக்கணக்கில் மக்கள் வந்து செல்வர். பொதுவாக கோடை காலங்களில் அருவியில் தண்ணீர் விழாது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வது வழக்கம். இந்தாண்டும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அருவி வற்றிவிட்டது.ஆனால் கடந்த வாரம் பெய்த மழை காரணமாக அருவியில் தண்ணீர் விழுந்தது. மழை நின்றதால் தற்போது அருவியில் மிகக்குறைவான அளவே தண்ணீர் விழுகிறது. இந்நிலையில் இன்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பொது மக்கள் திரளாக வருவார்கள் என்பதால், துாவானம் அணையில் இருந்து, இன்று ஒரு நாள் மட்டும் தண்ணீர் திறந்து விட வனத்துறை மின்வாரியத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.கடந்தாண்டும் இதே நிலை தான் இருந்தது. மின்வாரியம் பொது மக்களின் நலன் கருதி சித்திரை முதல் நாளில் தண்ணீர் திறந்து விட்டது. அதே போல இந்தாண்டும் இன்று தண்ணீர் திறந்து விடுமா என்று பொது மக்கள், சுற்றுலாப் பயணிகள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.மின்வாரியத்தினர் கூறியதாவது: நேற்று (ஏப்.13ல்) மாலையே தண்ணீர் திறந்து விடப்பட்டது. இன்று காலை அருவிக்கு தண்ணீர் வரத்து இருக்கும். இன்று மாலை அடைத்து விடுவோம்., என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ