போதைப்பொருட்கள் விற்றால் தகவல் தெரிவிக்க இணையதளம்
தேனி: கல்வி நிலையங்கள் அருகே பொது இடங்களில் தடைசெய்யப்பட்ட புகையிலை விற்றால் போலீஸ் ஸ்டேஷன்களுக்கு தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. அவ்வாறு தெரிவிக்கையில் தகவல் அளித்தவரின் விவரங்கள் விற்பனை செய்பவர்களுக்கு கிடைப்பதாகவும், அதனால் தகவல் அளித்தவர் பாதிப்படைவதாகவும் புகார்கள் எழுந்தன.இதனை தவிர்க்க மாநில அரசால் www.drugfree-tn.comஎன்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் புகார் தெரிவிக்க விரும்புபவர்கள் புகைப்படத்துடன் புகார் தெரிவிக்கலாம். விருப்பினால் மட்டும் அலைபேசி எண்ணை வழங்கலாம். இந்த இணையதள புகார்களை கண்காணிக்க மாவட்டம் வாரியாக தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்த இணையதளத்தில் எவ்வாறு புகார் அளிப்பது என்பது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்கள், கல்லுாரி முதல்வர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அவர்கள் மூலம் ஆசிரியர்கள், பேராசிரியர்கள், மாணவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படும். இணையதளம் மூலம் புகார் தெரிவிப்பவரின் ரகசியம் பாதுகாக்கப்படும் என்றனர்.