பு.த.கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தேவதானப்பட்டி: பெரியகுளம் அருகே ஜெயமங்கலம் நான்கு ரோடு பகுதியில் புதிய தமிழகம் கட்சி சார்பில், 'தங்களது ஜாதியை கூறி அவதுாறாக பேசிய சில்வார்பட்டியை சேர்ந்த முத்து காமாட்சி, ஜெயமங்கலம் பெரியசாமி,' ஆகியோரை கைது செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஒன்றிய செயலாளர் மாரிச்சாமி தலைமை வகித்தார். பெரியகுளம் சட்டசபை தொகுதி மாவட்ட செயலாளர் ஜெயச்சந்திரன், ஆண்டிபட்டி சட்டசபை தொகுதி மாவட்ட செயலாளர் இளையராஜா உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை இழிவாக பேசிய இருவரையும் போலீசார் கைது செய்ய வேண்டும் என கோஷமிட்டனர்.