வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இந்த திட்டத்தை விஜயகாந்த் சொன்ன போது கேலி செய்த கூட்டம் திமுக. டாஸ்மாக் 10ரூ போல ஒவ்வொரு டெலிவரிக்கும் கடை ஊழியர்கள் காசு கேட்காமல் இருந்தால் சரி.
தேனி : மாற்றுத்திறனாளிகள், முதியோர்களுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் மாவட்டத்தில் இன்று துவங்குகிறது. ஆனால், பொருட்களை ரேஷன் கடையில் இருந்து வீடுகளுக்கு கொண்டு சென்று வழங்கும் வாகன வாடகை யார் வழங்குவது என இதுவரை தெளிவாக கூறாததால் ரேஷன் பணியாளர்கள் குழப்பத்தில் உள்ளனர். மாற்றுத்திறனாளிகள், 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் இன்று அனைத்து ரேஷன் கடைகளுக்கும் விரிவு படுத்தப்பட்டுள்ளது. ஒரு ரேஷன் கடைக்கு உட்பட்டு எத்தனை மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் உள்ளனர் என ஏற்கனவே கணக்கெடுக்கப்பட்டுள்ளது. அவர்களது வீடுகளுக்கு வாகனங்களில் பொருட்களை ஏற்றி வீடுகள் முன் எடையிட்டு வழங்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. மாவட்டத்தில் சுமார் 45ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பயனடைவார்கள் என அதிகாரிகள் கூறினர். வாகன வாடகை வழங்குவது யார் ரேஷன் கடை விற்பனையாளர்கள் கூறுகையில், 'நல்ல திட்டம் என்றாலும் பொருட்களை கடையில் இருந்து பயனாளிகள் வீடுகளுக்கு எடுத்து செல்லும் வாகனங்களுக்கு வாடகை அளிக்க வேண்டும். பொருட்களை வண்டி ஏற்ற கூலி வழங்க வேண்டும். இதனால் கூடுதல் செலவுகள் ஏற்படும். இந்த செலவுத்தொகையை அரசு நேரடியாக அளிக்குமா அல்லது கூட்டுறவு சங்கங்கள் வழங்குமான என விளக்கம் அளிக்கவில்லை. இதற்கும் விற்பனையாளர்கள் தான் செலவு செய்ய வேண்டும் என்ற சூழல் வந்தால் திட்டம் துவங்கிய சில நாட்களிலேயே முடங்கும் நிலை ஏற்படும். அரசு வாகன வாடகை வழங்கிட வேண்டும்,' என்றனர்.
இந்த திட்டத்தை விஜயகாந்த் சொன்ன போது கேலி செய்த கூட்டம் திமுக. டாஸ்மாக் 10ரூ போல ஒவ்வொரு டெலிவரிக்கும் கடை ஊழியர்கள் காசு கேட்காமல் இருந்தால் சரி.