டூவீலர் விபத்தில் மனைவி பலி, கணவன் காயம்
கூடலுார்: கூடலுாரில் டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் மனைவி பலியானார். கணவன் பலத்த காயமுடன் கம்பம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளார்.காமயகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் பாபு 44. இவரது மனைவி மணிமேகலை 40. நேற்று இருவரும் டூவீலரில் கூடலுாரில் இருந்து கம்பம் நோக்கி சென்ற போது தனியார் பெட்ரோல் பங்க் அருகே எதிரே குமுளி நோக்கி வந்த கார் மோதியது. இதில் டூவீலரில் சென்ற மனைவி பலியானார். கணவன் பலத்த காயத்துடன் கம்பம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். கார் டிரைவர் முகமது உவைசை கூடலுார் வடக்கு போலீசார் கைது செய்து, விசாரிக்கின்றனர்.