உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தாக்குதல் சுபாவத்துடன் வலம் வரும் காட்டு யானைகள் பொது மக்கள், தொழிலாளர்கள் கலக்கம்

தாக்குதல் சுபாவத்துடன் வலம் வரும் காட்டு யானைகள் பொது மக்கள், தொழிலாளர்கள் கலக்கம்

மூணாறு:மூணாறில் நீண்ட இடைவெளிக்கு பிறகு காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பதட்டத்தை ஏற்படுத்தியது.மூணாறு பகுதியில் சமீப காலமாக காட்டு யானைகளிடம் சிக்கி பலர் பலத்த காயமுற்றபோதும் உயிர் பலிகள் இல்லை.இந்நிலையில் கோவை தொப்பனூர் எம்.ஆர். புரத்தைச் சேர்ந்த பால்ராஜ் 79, திருமணம் நிகழ்ச்சியில் பங்கேற்க மூணாறு அருகே தென்மலை எஸ்டேட் லோயர் டிவிஷனில் உறவினர் வீட்டுக்கு வந்தபோது நேற்று முன்தினம் இரவு காட்டு யானை தாக்கி இறந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு இச் சம்பவம் நடந்ததால் எஸ்டேட் பகுதிகளில் பதட்டத்தை ஏற்படுத்தியது.

நிதியுதவி

இறந்த பால்ராஜின் குடும்பத்தினருக்கு முதல்கட்டமாக ரூ.50 ஆயிரம் வழங்கிய வனத்துறை அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்லும் செலவையும் ஏற்றது.

சாது

மூணாறு பகுதியில் காட்டு யானைகள் ஏராளம் உள்ள போதும் அவற்றில் வயது முதிர்ந்த படையப்பா ஆண் காட்டு யானை மிகவும் பிரபலம். அந்த யானை தீவனத்தை தேடி ரோடு, குடியிருப்பு பகுதி ஆகியவற்றில் பகல், இரவு பாராமல் சுற்றித் திரிவது வழக்கம். மிகவும் சாதுவான படையப்பா மனிதர்களை தாக்குவதில்லை. மாறாக எதிர்பாராத வகையில் சிக்கும் வாகனங்களை விட்டு வைப்பதில்லை.

ஆபத்தான யானைகள்

சமீப காலமாக மூணாறு பகுதியில் ஒற்றை கொம்பன், கட்டை கொம்பன் என இரண்டு ஆண் காட்டு யானைகள் தாக்குதல் சுபாவத்துடன் வலம் வருகின்றன. மூணாறு அருகே கன்னிமலை எஸ்டேட் பகுதியில் உள்ள மைதானத்திற்கு இரு தினங்களுக்கு முன்பு வந்த ஒற்றை கொம்பன் அங்கு கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டவர்களை விரட்டியது. அதேபோல் பால்ராஜை கொன்றது கட்டை கொம்பன் என வனத்துறை உறுதி செய்தனர். தாக்குதல் சுபாத்துடன் காட்டு யானைகள் சுற்றித் திரிவதால் பொதுமக்கள், தொழிலாளர்கள் ஆகியோர் கலக்கம் அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை