உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஜீப்புகளை சேதப்படுத்திய காட்டு யானைகள்

ஜீப்புகளை சேதப்படுத்திய காட்டு யானைகள்

மூணாறு,: மூணாறு அருகே இடமலைகுடியில் அடர்ந்த வனத்தினுள் 24 குடிகளில் ( கிராமம்) மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். அந்த மக்களுக்கு மட்டும் இடமலைகுடி ஊராட்சி உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அங்குள்ள வெள்ளவரைகுடியைச் சேர்ந்த அஜ்மேகன், தர்மேந்திரன் ஆகியோர் தங்களுக்குச் சொந்தமான ஜீப்பை சவாரி முடிந்து கேப்பக்காடு பகுதியில் உள்ள தேன்பாறைகுடியில் அலைபேசி டவர் அருகே நேற்று முன்தினம் இரவு நிறுத்தி இருந்தனர். அதேபோல் சொசைட்டிகுடியில் உள்ள கூட்டுறவு சங்க ஊழியர் தீவு தனது டூவீலரை நிறுத்தி இருந்தார். அங்கு இரவில் வந்த காட்டு யானைகள் ஜீப்புகள், டூவீலர் ஆகியவற்றை சேதப்படுத்தின. அதனை நேற்று காலை பார்த்து உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தங்களின் வாழ்வாதரமான வாகனங்களை காட்டு யானைகள் சேதப்படுத்தியதால், அவற்றிற்கு வனத்துறையினர் இழப்பீடு வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ