மேலும் செய்திகள்
வேகவதி ஆறு ஆக்கிரமிப்பு அகற்றுவதில் மெத்தனம்
05-Apr-2025
சின்னமனூர்: சின்னமனூரில் நகராட்சி பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை துவக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.சின்னமனூர் நகராட்சி பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. நகருக்குள் உள்ள பெரிய தெருக்கள் சுருங்கி, நடக்க கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சீப்பாலக்கோட்டை ரோடு, மார்க்கையன்கோட்டை ரோடு, பழைய போலீஸ் ஸ்டேஷன் ரோடு, பழைய பத்திர ஆபீஸ் ரோடு என அனைத்து ரோடுகளிலும் தங்கள் இஸ்டத்திற்கு படிக்கட்டுகளை இழுத்து ஆக்கிரமித்துள்ளனர்.சமீபத்தில் வடக்கு, கிழக்கு ரத வீதிகள், முத்தாலம்மன் கோயில் தெரு, சாமி குளம், சீப்பாலக்கோட்டை ரோடு, மார்க்கையன்கோட்டை ரோடு பகுதிகள் மற்றும் நகர் முழுவதும் ஆக்கிரமிப்புகளை அகற்ற உள்ளதாக நகராட்சி அறிவிப்பு வெளியானது. பொதுமக்கள் சிலர் தாங்களாகவே அதற்றி கொள்கிறோம் என்று கூறியதால், அப்படியே விட்டு சென்று விட்டனர். இதனால் நகரில் பழைய நிலையே தொடர்கிறது.குறிப்பாக சீப்பாலக்கோட்டை ரோடு, மார்க்கையன்கோட்டை ரோடு, முத்தாலம்மன் கோயில் வீதி உள்ளிட்ட சில பகுதிகள் மிக மோசமாக உள்ளன.ஆக்கிரமிப்புக்களை அகற்ற கமிஷனர் தனி கவனம் செலுத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்னதாக நகரமைப்பு அலுவலர் பணியிடம் நிரப்பப்பட வேண்டும்.
05-Apr-2025