மேலும் செய்திகள்
போலீஸ் செய்தி
07-Sep-2025
தேவதானப்பட்டி : பெரியகுளம் தாலுகா கெங்குவார்பட்டி புஷ்பராணி நகரைச் சேர்ந்தவர் கணேசன் 50. பெரியகுளம் வத்தலக்குண்டு ரோடு பாண்டி பொன் முனீஸ்வரர் கோயில் எதிர்புறம் காங்., முன்னாள் எம்.பி., ஞானதேசிகன் தென்னந்தோப்பு காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது மனைவி செல்வி 44. யுடன் தோட்டத்தில் களை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது செல்வியை பாம்பு கடித்தது. தேவதானப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்வி கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதனை செய்த டாக்டர், செல்வி இறந்துவிட்டதாக தெரிவித்தார். தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
07-Sep-2025